ரிமோட் சென்சிங் படிப்பு | Kalvimalar - News

ரிமோட் சென்சிங் படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ கட்டுப்பாட்டின் கீழ் டேராடூனில் இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு:
எம்.டெக்., இன் ரிமோட் சென்சிங் அண்ட் ஜியோகிராபிக்கல் இன்பர்மேஷன் சிஸ்டம்

பிரிவுகள்:
 அக்ரிகல்ச்சர் அண்ட் சாயில்ஸ்
 பாரஸ்ட் ரிசோர்சஸ் அண்ட் இகோசிஸ்டம் அனாலிசிஸ்
 ஜியோஇன்பர்மெடிக்ஸ்
 ஜியோசயின்சஸ்
 மரைன் அண்ட் அட்மாஸ்பெரிக் சயின்சஸ்
 சாட்டிலைட் இமேஜ் அனாலிசிஸ் அண்ட் போட்டோஜியோமெட்ரி
 அர்பன் அண்ட் ரீஜனல் ஸ்டடீஸ்
 வாட்டர் ரிசோர்சஸ்

தகுதிகள்:
அறிவியல் துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மொத்த இடங்கள்: 40

விண்ணப்பிக்கும் முறை:
கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

சேர்க்கை முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை பெறுவர்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 29

விபரங்களுக்கு: www.iirs.gov.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us