பேக்கேஜிங் டிப்ளமா | Kalvimalar - News

பேக்கேஜிங் டிப்ளமா

எழுத்தின் அளவு :

மத்திய அரசின்கீழ் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங்’ கல்வி நிறுவனத்தில் தொலைநிலை டிப்ளமா படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.




படிப்பு:


டிப்ளமா இன் பேக்கேஜிங் - ஒரு ஆண்டு 6 மாதங்கள்.




தகுதி: 


யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வர்த்தகம் அல்லது கலை கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். புரொடக்‌ஷன், பர்சேஸ், மார்க்கெட்டிங் அல்லது குவாலிட்டி கன்ட்ரோல் போன்ற துறைகளில் குறைந்தது ஒரு ஆண்டு பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டியதும் அவசியம்.




விண்ணப்பிக்கும் முறை:


இதற்கான விண்ணப்பத்தை நேரடியாக சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில் உள்ள ஐ.ஐ.பி., கல்வி நிறுவனங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்லூரி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.




விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 15




விபரங்களுக்கு: www.iip-in.com


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us