ஜே.என்.யூ.,வில் அட்மிஷன் | Kalvimalar - News

ஜே.என்.யூ.,வில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் புதுடில்லியில் இயங்கி வரும் ‘ஜவஹர்லால் நேரு யூனிவர்சிட்டி’ (ஜே.என்.யூ.,) கல்வி நிறுவனத்தில் முதுநிலை மேலாண்மை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு:
மாஸ்டர் ஆப் பிஸ்னஸ் அடிமினிஸ்ட்ரேஷன் (எம்.பி.ஏ.,)

பிரிவுகள்:
 எம்.பி.ஏ., இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட்
 எம்.பி.ஏ., இன் மார்கெட்டிங் மேனேஜ்மெண்ட்
 எம்.பி.ஏ., இன் பினான்ஷியல் மேனேஜ்மெண்ட்
 எம்.பி.ஏ., இன் ஆப்ரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட்
 எம்.பி.ஏ., இன் ரூரல் மேனேஜ்மெண்ட்

தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும். மேலும், கேட் தகுதி தேர்வினை எழுதியிருக்க வேண்டியது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:
ஜே.என்.யூ., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.

சேர்க்கை முறை:
கேட் தகுதி தேர்வில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே சேர்க்கை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 1

விபரங்களுக்கு: www.jnu.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us