செக்யூரிட்டி மார்க்கெட்ஸ் படிப்பு | Kalvimalar - News

செக்யூரிட்டி மார்க்கெட்ஸ் படிப்பு

எழுத்தின் அளவு :

‘செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ் போர்ட் ஆப் இந்தியா’ (செபி) கட்டுப்பாட்டின் கீழ், மும்பையில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்ஸ் (என்.ஐ.எஸ்.எம்.,) கல்வி நிறுவனத்தில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
 போஸ்ட் கிராட்ஜூவேட் புரோகிராம் இன் செக்யூரிட்டி மார்க்கெட்ஸ் (பி.ஜி.பி.எஸ்.எம்.,)
 போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் - செக்யூரிட்டி மார்கெட்ஸ் (பி.ஜி.டி.எம் - எஸ்.எம்.,)

தகுதிகள்:
யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் கேட், எக்ஸாட், சிமேட், எ.டி.எம்.ஏ., மேட், ஜிமேட் அல்லது எம்.எச்-செட்., ஆகிய தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

வயது வரம்பு:
குறிப்பிட்ட வயது வரம்பு என்று ஏதும் இல்லை. ஆனால், பி.ஜி.பி.எஸ்.எம்., படிப்பிற்கு 30 வயதிற்குக் குறைந்தவர்களுக்கும், பி.ஜி.டி.எம் - எஸ்.எம்., படிப்பிற்கு 28 வயதிற்குக் குறைந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.

சேர்க்கை முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து அல்லது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 28

விபரங்களுக்கு: www.nism.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us