மேலாண்மை படிப்பு | Kalvimalar - News

மேலாண்மை படிப்பு

எழுத்தின் அளவு :

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான ‘ராஜிவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் டெக்னாலஜி’-ல் முதுநிலை மேலாண்மை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு:
எம்.பி.ஏ., - எனர்ஜி மேனேஜ்மெண்ட், பினான்ஷியல் மேனேஜ்மெண்ட், மார்கெட்டிங் மேனேஜ்மெண்ட் மற்றும் ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட்

தகுதிகள்:
பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்ணுடன் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் 5 சதவீதம் விலக்களிக்கப்படும். கேட், சிமேட்,ஜிமேட், எக்ஸாட் ஆகிய தகுதி தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பப் பதிவை மாணவர்கள் நேரடியாகக் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலமாகவும் பதிவு செய்யலாம் அல்லது பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கல்வி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியிலும் அனுப்பலாம்.

தேர்வு முறை:
இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்களின் மதிப்பெண் சதவீதம், தகுதி தேர்வில் அவர்கள் பெற்றிருக்கும் இடம், பணி அனுபவம் மற்றும் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 15

விபரங்களுக்கு: www.domsrgipt.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us