என்.ஐ.டி.,யில் மேலாண்மை படிப்பு | Kalvimalar - News

என்.ஐ.டி.,யில் மேலாண்மை படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்களுள் ஒன்றான கர்நாடகாவில் இருக்கும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’(என்.ஐ.டி.,) கல்வி நிறுவனத்தில் மேலாண்மை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு:
மாஸ்டர் ஆப் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (எம்.பி.ஏ.,) - 2 ஆண்டுகள்

தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை விலக்கு தரப்படும். கேட் 2018 அல்லது ஜிமேட் 2018 அல்லது சிமேட் 2018 தகுதி தேர்வினை எழுதியிருக்க வேண்டியதும் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பப் படிவத்தை என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்க செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பல்கலைக்கழக நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை:
தகுதி தேர்வுகளில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையிலும் நேர்முகத் தேர்வில் மாணவர்கள் பெரும் மதிப்பெண்ணின் அடிப்படையிலுமே சேர்க்கை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 5

விபரங்களுக்கு: www.nitk.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us