அண்ணா பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

அண்ணா பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சென்னை அண்ணா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: 
மாஸ்டர் ஆப் பிஸ்னஸ் அட்மினிஷ்ட்ரேசன் - எம்.பி.ஏ.,
மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - எம்.சி.ஏ.,
மாஸ்டர் ஆப் சயின்ஸ் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) - எம்.எஸ்சி., (சி.எஸ்.,)

தகுதிகள்:
எம்.பி.ஏ., படிப்பிற்கு ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கு, இளநிலைப் பட்டப்படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியலை ஒரு பாடமாக படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் முறை: அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பிரத்யேக நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஏற்கனவே, டான்செட் தேர்வு எழுதியவர்கள் இத்தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
எம்.பி.ஏ., / எம்.சி.ஏ.,  - பிப்., 17
எம்.எஸ்சி., (சி.எஸ்.,) - பிப்., 28

விபரங்களுக்கு: www.annauniv.edu

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us