ஐ.ஐ.எம்., அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.ஐ.எம்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

இந்தூரில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்’ (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனத்தில் முதுநிலை சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: போஸ்ட் கிராட்ஜூவேட் சார்டிபிகேட் புரோகிராம் இன் பினான்ஸ் (பி.ஜி.சி.பி.எப்.,) - ஓர் ஆண்டு

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண் சதவீதத்துடன் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தது 2 ஆண்டுகள் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஸ்., சி.எப்.ஏ., சி.எப்.பி., போன்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கு இந்த 2 ஆண்டு பணி அனுபவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஐ.ஐ.எம்., இந்தூரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நேரடியாகக் கல்வி நிறுவன முகவரிக்கே பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை: தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 31

விபரங்களுக்கு: www.iimidr.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us