எம்.பி.ஏ., படிப்பு | Kalvimalar - News

எம்.பி.ஏ., படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இயங்கி வரும் ‘அட்டல் பிஹாரி வாஜ்பாய் - இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட்’ (ஐ.ஐ.ஐ.டி.எம்.,) கல்வி நிறுவனத்தில் 2 ஆண்டுகள் மேலாண்மை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
* எம்.பி.ஏ., 
* எம்.பி.ஏ., - பிஸ்னஸ் அனாலிடிக்ஸ்

தகுதிகள்: இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். கேட், மேட் , சிமேட், ஜிமேட் போன்ற தேசிய தகுதி தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து மாணவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு முறை: டெல்லி, குவாலியர், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 4

விபரங்களுக்கு: www.iiitm.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us