வேர்ல்ட் பிரஸ் இன்ஸ்டிடியூட் பெலோஷிப் 2019 | Kalvimalar - News

வேர்ல்ட் பிரஸ் இன்ஸ்டிடியூட் பெலோஷிப் 2019

எழுத்தின் அளவு :

உலகின் பல நாடுகளில் இருக்கும் தொழில்முறை பத்திரிகையாளர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, அவர்களின் திறன் மேம்படுத்த உதவித்தொகை திட்டங்களை வழங்கி வருகிறது, வேர்ல்ட் பிரஸ் இன்ஸ்டிடியூட்.

அமெரிக்காவில் செயல்படும் ”வேர்ல்ட் பிரஸ் இன்ஸ்டிடியூட்டி’’, அனுபவமுள்ள பத்திரிகையார்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பெலோஷிப் 2019-யை அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிகையார்களை இணைக்கும் நோக்கிலும், அவர்களின் திறமைகளை வளர்க்கும் வகையிலும் இந்த திட்டம் உருவாக்கபட்டு, கடந்த பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களை ஊக்குவித்து வருகிறது.

தகுதிகள்:
*குறைந்தது ஐந்து ஆண்டுகள் பத்திரிகை துறையில் பணியாற்றி இருக்க வேண்டும்.
*ஆங்கிலத்தில் சரலமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
*தலைமை பண்புகளுடன் செயல்படும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

விதிமுறைகள்:
* வேர்ல்ட் பிரஸ் இன்ஸ்டிடியூட் நடத்தும் அனைத்து வகுப்புகளிலும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
*பயிற்சி முடியும் வரை அமெரிக்காவில் தங்கி இருக்க வேண்டும். 
*வேறு நாட்டு மக்களுடன் நட்புடன் பழகும் குணம் கொண்டிருக்க வேண்டும்.
*பயிற்சியில் அதிகம் பயணம் இருப்பதால், எப்போதும் பயணத்திற்கு தயராக இருக்க வேண்டும்.

உதவித்தொகை:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் முழுவதும் இலவசமாக வழங்கப்படும். அவர்கள் அமெரிக்காவிற்கு வந்து செல்ல விமான செலவும், பயிற்சி ரீதியாக மெற்கொள்ளும் அனைத்து பயணங்களுக்கு ஆகும் செலவும் முழுமையாக ஏற்கப்படும். உணவு, தங்கும் வசதிகளுக்குமான தொகையும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
வேர்ல்ட் பிரஸ் இன்ஸ்டிடியூட் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்தோடு மூன்று ஒப்புதல் படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 15

விபரங்களுக்க: https://worldpressinstitute.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us