பிஎச்.டி., படிப்பு | Kalvimalar - News

பிஎச்.டி., படிப்பு

எழுத்தின் அளவு :

உயிரியல் தொழில்நுட்பத்துறையின் சார்பாக நோய் எதிர்ப்பு சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, புதுடில்லியில் இயங்கி வரும் தன்னாட்சி கல்வி நிறுவனமான, நேஷனல் ‘இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனாலஜி’ (என்.ஐ.ஐ.,)-ல் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

பிரிவுகள்: பிஎச்.டி., (இம்யூனாலஜி, இன்பக்‌ஷியஸ் அண்ட் குரோனிக் பயாலஜி, மாலிகுலார் அண்ட் செல்லுலார் பயாலஜி, கெமிக்கல் பயாலஜி, ஸ்ட்ரக்ச்சுரல் பயாலாஜி மற்றும் காம்புடேஷனல் பயாலஜி)

தகுதிகள்: உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் போன்ற அறிவியல் துறை சார்ந்த பிரிவில் எம்.எஸ்சி., / எம்.டெக்.,  எம்.பி.பி.எஸ்., எம்.வி.எஸ்சி., எம்.பார்ம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை பட்டத்தை 60 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீதம் விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: என்.ஐ.ஐ., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

சேர்க்கை முறை: நாட்டின் பல்வேறு மையங்களில் கணினி வழி நுழைவுத் தேர்வு வாயிலாக, மாணவர் சேர்க்கை நடத்தப்படும் அல்லது ‘ஜாயிண்ட் கிராட்ஜூவேட் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன் இன் பயாலஜி அண்ட் இன்டர் டிசிப்ளினரி லைப் சயின்சஸ்’ (ஜே.ஜி.இ.இ.பி.ஐ.எல்.எஸ்., ) தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 27

தேர்வு நாள்: பிப்ரவரி 24

நேர்முகத் தேர்வு: ஜூன் 13 முதல் 15 வரை

விபரங்களுக்கு: www.nii.res.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us