எம்.பி.ஏ., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.பி.ஏ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

‘ஆர்மி வெல்பார் எஜூகேஷன் சொசைட்டியால்’ கொல்கத்தாவில் நடத்தப்பட்டு வரும் ‘ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்’ கல்வி நிறுவனத்தில் முதுநிலை மேலாண்மை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: மாஸ்டர் ஆப் பிசுனஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (எம்.பி.ஏ., ) - 2 வருடம்
பிரிவுகள்: மார்கெட்டிங், பினான்ஸ், எம்.ஐ.எஸ்., எச்.ஆர்., ஆப்ரேஷன்ஸ், பிசுனஸ் அனலிடிக்ஸ்

தகுதிகள்: இங்கு 80 சதவீதம் ராணுவத்தில் பணியாற்றியவர்களின் பிள்ளைகளுக்கும், 20 சதவீதம் பொது பிரிவினருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்த மற்றும் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனம் நடத்தும் ’கேட்’ தேர்வினை எழுதிய மாணவர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை நேரடியாகக் கல்வி நிர்வாகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம் அல்லது ஏ.ஐ.எம்., அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலமும் பதிவு செய்யலாம்.

சேர்க்கை முறை: மொத்தம் 120 (ராணுவ பிரிவினர் - 96, பொது பிரிவினர் - 24) மாணவர்களுக்கு இப்படிப்பில் சேர்க்கை வழங்கப்படவுள்ளது. கேட் தேர்வில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 15

விபரங்களுக்கு: www.aim.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us