இலவச ஆன்லைன் படிப்புகள் | Kalvimalar - News

இலவச ஆன்லைன் படிப்புகள்

எழுத்தின் அளவு :

பிரிட்டனின் சிறந்த கல்வி நிறுவனங்களின் மூலம் ‘புயூச்சர் லேர்ன் காம்பெய்ன்’ என்கிற கல்வி திட்டத்தின் கீழ், இந்தியா உட்பட 145 நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை 13 வேறுபட்ட துறைகளில் வழங்குகிறது, பிரிட்டிஷ் கவுன்சில்!

புயூச்சர் லேர்ன் காம்பெய்ன்
இந்த கல்வி திட்டத்தின் மூலம் 320 ‘மாசிவ் ஓபன் ஆன்லைன் கோர்சஸ்’ (எம்.ஓ.ஓ.சி.,) படிப்புகளை, பிரிட்டனின் 49 கல்வி நிறுவனங்களின் மூலம் பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கவுள்ளது. ஒவ்வொரு துறையிலும் ஆழமான தொழில்முறை சார்ந்த கல்வியின் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்குவதே இந்த கல்வி திட்டத்தின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு ஒரு சான்றிதழ் படிப்பு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு மற்ற படிப்புகளில் சேர விரும்பினால் அதற்கான தொகையை செலுத்த வேண்டும். படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு பிரிட்டன் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது.

துறைகள்:
 பிசுனஸ் அண்ட் மேனேஜ்மெண்ட்
 கிரியேடிவ் ஆர்ட்ஸ் அண்ட் மீடியா
 ஹெல்த் அண்ட் சைக்காலஜி
 ஹிஸ்ட்ரி
 லாங்குவேஜ் அண்ட் கல்ச்சர்ஸ்
 ஸ்டடி ஆப் லா
 லிட்ரேச்சர்
 நேச்சர் அண்ட் என்விரான்மெண்ட்
 பாலிடிக்ஸ் அண்ட் தி மாடர்ன் வார்ல்ட்
 சயின்ஸ், இன்ஜினியரிங் அண்ட் மாத்தமெடிக்ஸ்
 ஸ்டடி ஸ்கில்ஸ்
 டீச்சிங்
 டெக் அண்ட் கோடிங்

தகுதிகள்:
இந்தியா உட்பட 145 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த இலவச கல்வி திட்டத்தில் சேர்வதற்கான தகுதியைப் பெறுகிறார்கள். குறிப்பிட்ட கல்வித் தகுதி என்று எதுவும் இல்லை. வயது வரம்பும் கிடையாது.

சேர்க்கை முறை:
இந்த கல்வி திட்டத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையம் மூலம், வழங்கப்படும் படிப்புகள், கால அளவு, கற்பிக்கும் ஆசிரியர்கள், வழங்கும் கல்வி நிறுவனம் என அனைத்து தகவல்களையும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். பின்னர் தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்வு செய்து, அதில் தங்களை பதிவு செய்ய வேண்டும். அது சார்ந்த அனைத்துத் தகவல்களும் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 16

விபரங்களுக்கு: www.britishcouncil.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us