கடல்சார் படிப்பு | Kalvimalar - News

கடல்சார் படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் ‘இந்தியன் மேரிடைம் யூனிவர்சிட்டி’ கல்வி நிறுவனத்தில் முதுநிலை மற்றும் பிஎச்.டி., பட்டப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது.

படிப்புகள்: எம்.எஸ்., பிஎச்.டி.,

தகுதிகள்: எம்.எஸ்., படிப்பிற்குத் துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பிஎச்.டி., படிப்பிற்கு, முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண் விலக்களிக்கப்படும். மேலும் பிஎச்.டி., படிப்பிற்கு முதுநிலை டிப்ளமா படித்தவர்கள் இரண்டாண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

பிரிவுகள்:
ஸ்கூல் ஆப் நாட்டிக்கல் ஸ்டடீஸ்
ஸ்கூல் ஆப் மரைன் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி
ஸ்கூல் ஆப் மேரிடைம் மேனேஜ்மென்ட் 
ஸ்கூல் ஆப் நேவல் ஆர்கிடெக்ச்சர் அண்ட் ஓஷன் இன்ஜினியரிங் 

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை ஐ.எம்.யூ., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் பதிவு செய்யலாம். தேவைப்படும் சான்றிதழ்கள், ஆதார படிவங்கள் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பத்தைக் கவனமாக சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

தேர்வு முறை: நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். பொது அறிவு கேள்விகள், மரைன் துறை சார்ந்த கேள்விகள் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ள போகும் துறை சார்ந்த கேள்விகள் என மொத்தம் 120 கேள்விகள் மல்டிபில் சாய்ஸ் வடிவில் கேட்கப்படும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணை பொருத்தே சேர்க்கை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 31

தேர்வு நாள்: ஜனவரி 19

விபரங்களுக்கு: www.imu.edu.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us