ஹாங்காங் உதவித்தொகை | Kalvimalar - News

ஹாங்காங் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

ஹாங்காங்கில் பிஎச்.டி., பட்டம் பெற விரும்பும் 250 மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை, அந்நாட்டின் ஆராய்ச்சி மானிய குழு அறிவித்துள்ளது!

ஹாங்காங் பிஎச்.டி., பெல்லோஷிப் ஸ்கீம் - எச்.கே.பி.எப்.எஸ்.,
ஹாங்காங்கில் உள்ள சிறந்த 8 கல்வி நிறுவனங்களில், ஆராய்ச்சிக்கான பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கு, ஹாங்காங் அரசு இந்த உதவித்தொகையை வழங்குகிறது.

கல்வி நிறுவனங்கள்:
· சிட்டி யூனிவர்சிட்டி ஆப் ஹாங்காங்
· ஹாங்காங் பாப்டிஸ்ட் யூனிவர்சிட்டி
· லிங்னன் யூனிவர்சிட்டி
· தி சைனீஸ் யூனிவர்சிட்டி ஆப் ஹாங்காங்
· தி எஜூகேஷன் யூனிவர்சிட்டி ஆப் ஹாங்காங்
· தி ஹாங்காங் பாலிடெக்னிக் யூனிவர்சிட்டி
· தி ஹாங்காங் யூனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி
· தி யூனிவர்சிட்டி ஆப் ஹாங்காங்

தகுதிகள்:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுநிலை அல்லது எம்.பில்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். முந்தைய பட்டப்படிப்புகளில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையிலேயே உதவித்தொகை வழங்கப்படும். குறிப்பிடப்பட்டுள்ள இந்த எட்டு கல்வி நிறுவனத்தில், ஏதேனும் ஒன்றில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.

துறைகள்:
அறிவியல், மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மானுடவியல், சமூக அறிவியல் மற்றும் வணிக படிப்புகள்.

விண்ணப்பிக்கும் முறை:
எச்.கே.பி.எப்.எஸ்., இணையத்தளத்தில் இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை செய்யலாம். தேர்வான விண்ணப்பதாரர்கள், தேர்வு செய்யப்பட்ட எச்.கே.பி.எப்.எஸ்., பிரத்யேக எண்ணை அந்தந்த கல்வி நிறுவனத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.

உதவித்தொகை:
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, உதவித்தொகையாக, ஆண்டிற்கு 38 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 27 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இவை தவிர, ஆராய்ச்சி சார்ந்த பயணங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை:
கல்வித்திறன், ஆராய்ச்சியின் முக்கியத்துவம், தொடர்பியல் திறன்கள், தலைமை பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 1

விபரங்களுக்கு: https://cerg1.ugc.edu.hk/hkpfs/index.html

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us