முதுநிலை டிப்ளமா படிப்புகள் | Kalvimalar - News

முதுநிலை டிப்ளமா படிப்புகள்

எழுத்தின் அளவு :

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின்கீழ், பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளான்டேஷன் மேனேஜ்மெண்ட் எனும் கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா மேனேஜ்மெண்ட் படிப்புகளாக, புட் புராசசிங் அண்ட் பிசுனஸ் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.டி.எம் - எப்.பி.பி.எம்.,) மற்றும் அக்ரிபிசுனஸ் அண்ட் பிளான்டேஷன் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.டி.எம் - ஏ.பி.பி.எம்.,) ஆகிய படிப்புகள்.

தகுதிகள்: பி.ஜி.டி.எம் - எப்.பி.பி.எம்., படிப்பிற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் புட் டெக்னாலஜி, புட் சயின்ஸ், புட் நியூட்ரீஷியன், பிஷரி, டெய்ரி, அனிமல் ஹஸ்பண்டெரி, ஹார்டிகல்ச்சர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சார்ந்த துறையில் 50 சதிவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பி.ஜி.டி.எம் - ஏ.பி.பி.எம்., படிப்பிற்கு வேளாண்மை சார்ந்த ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்படும். மேலும், கேட் / மேட் /  ஏ.டி.எம்.ஏ., / சிமேட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஐ.ஐ.பி.எம்.பி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெங்களூருவில் இருக்கும் கல்வி நிறுவன முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு முறை: மாணவர்கள், தகுதி தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 31

விபரங்களுக்கு:  iipmb.edu.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us