ஜி.பி.ஏ.டி., அறிவிப்பு | Kalvimalar - News

ஜி.பி.ஏ.டி., அறிவிப்பு

எழுத்தின் அளவு :

முதுநிலை பார்மசி படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்காக தேசிய அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வே, ஜி.பி.ஏ.டி., எனப்படும் ‘கிராட்ஜூவேட் பார்மசி ஆப்டிடியூட் டெஸ்ட்’. இந்த ஆண்டு முதல் நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சியால் (என்.டி.ஏ.,) நடத்தப்படும் இத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பு: எம்.பார்ம்.,

தகுதிகள்: பார்மசியில் 4 ஆண்டு இளநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பி.டெக்.,-பார்மசுட்டிக்கல் அண்ட் பைன் டெக்னாலஜி அல்லது அதற்கு நிகரான பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது. இத்தேர்வு எழுத வயது வரம்பு ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பப் பதிவை மாணவர்கள் என்.டி.ஏ., வலைத்தளத்தில் ஜி.பி.ஏ.டி., தேர்விற்காகக் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறை: கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் இத்தேர்வு மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும். 125 ‘அப்ஜெக்டிவ்’ வகை கேள்விகளுடன் 500 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேசிய அளவில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 30

தேர்வு நாள்: ஜனவரி 28

விபரங்களுக்கு: www.ntagpat.nic.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us