ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதா? | Kalvimalar - News

ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதா? மார்ச் 01,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


இது பற்றிய தகவல்கள் வெளியாகிவிட்டது. இதற்கான விண்ணப்பத்தை பிப்ரவரி 25 முதல் ஏப்ரல் 15 வரை பெறலாம். புதுச்சேரி ஜிப்மர் வளாகத்திலுள்ள ஸ்டேட் பாங்கில் ரூ.750 பணமாகச் செலுத்திப் பெறலாம். மேலும் இதை ஜிப்மர் நிர்வாக அலுவலகத்திலுள்ள The Professor (Academic) அலுவலகத்திலிருந்தும் தபால் மூலமாகப் பெறலாம். ஏப்ரல் 15க்குள் நிரப்பிய விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும். ஜூன் 6ந் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும். புதுச்சேரி தவிர இதை தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே எழுத முடியும்.

இத்தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும். +2 நிலையிலான பாடத்திட்டத்திலிருந்து தான் கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் பாடங்களிலிருந்து 200 கேள்விகள் இதில் இடம் பெறும். நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது.
முழு விபரங்களறியும் இணைய தள முகவரி: www.jipmer.edu

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us