ராணுவத்தில் டெக்னிக்கல் படிப்பு | Kalvimalar - News

ராணுவத்தில் டெக்னிக்கல் படிப்பு

எழுத்தின் அளவு :

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவ அகாடமியில் (ஐ.எம்.ஏ.,) டெக்னிக்கல் கிராட்ஜூவேட் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பு:
டெக்னிக்கல் கிராட்ஜூவேட் கோர்ஸ் (டி.ஜி.சி., - 129). டேராடூனில் உள்ள ஐ.எம்.ஏ., கல்வி நிறுவனத்தில் ஓர் ஆண்டு பயிற்சி வழங்கப்படும்.

தகுதிகள்:
இந்திய குடியுரிமை பெற்றவராகவும், திருமணம் ஆகாதவராகவும் இருக்க வேண்டியது அவசியம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:
20 முதல் 27 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

இடங்கள்:
* சிவில் - 10
* ஆர்க்கிடெக்ச்சர் - 1
* மெக்கானிக்கல் - 4
* இ.இ.இ., - 5
* சி.எஸ்.இ., / ஐ.டி., - 6
* இ.சி.இ., - 7
* எலக்ட்ரானிக்ஸ் - 2
* மெட்டலார்ஜிகல் - 2
* இன்ஸ்ட்ருமெண்டேஷன் - 2
* மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் மைக்ரோவேவ் - 1
என பொறியியலில் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த, மொத்தம் 40 மாணவர்களுக்கு இந்த டெக்னிக்கல் படிப்பிற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான தீதீதீ.டீணிடிணடிணஞீடிச்ணச்ணூட்தூ.ணடிஞி.டிண வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

சேர்க்கை முறை: மொத்தம் இரண்டு நிலைகளில் மாணவர் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்களின் உடல் தகுதி, பார்வைத் திறன் மற்றும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 28

விபரங்களுக்கு: http://joinindianarmy.nic.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us