என்.பி.ஆர்.சி., அட்மிஷன் | Kalvimalar - News

என்.பி.ஆர்.சி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் நேஷனல் பிரெய்ன் ரிசர்ச் சென்டர் (என்.பி.ஆர்.சி.,) கல்வி நிறுவனத்தில் முதுநிலை அறிவியல் மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
· எம்.எஸ்சி., -நியூரோசயின்ஸ்
· பிஎச்.டி.,-நியூரோசயின்ஸ்

தகுதிகள்:
பிஎச்.டி., படிப்பிற்கு இயற்பியல், வேதியியல், கணிதம், வாழ்வியல் அறிவியல், புள்ளியியல், பார்மசி, சைக்காலஜி, பொறியியல், மருத்துவம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க
வேண்டும். 10ம் மற்றும் 12ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

எம்.எஸ்சி., படிப்பிற்கு இயற்பியல், வேதியியல், கணிதம், வாழ்வியல் அறிவியல், புள்ளியியல், பார்மசி, சைக்காலஜி, பொறியியல், மருத்துவம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும்.

தகுதி தேர்வுகள்:
பிஎச்.டி., படிப்பிற்கு ஜாயிண்ட் கிராட்ஜூவேட் என்ட்ரன்ஸ் எக்சாம் பார் பயாலஜி அண்ட் இன்டர்டிசிப்ளினரி லைப் சயின்ஸ் (ஜே.ஜி.இ.இ.ஐ.எல்.எஸ்.,) தகுதி தேர்வு அல்லது கேட் அல்லது
ஜெஸ்ட் அல்லது ஜே.ஆர்.எப்.,  தேர்வு எழுதியிருக்க வேண்டும். எம்.எஸ்சி., படிப்பிற்கு ஜே.ஜி.இ.இ.ஐ.எஸ்., தேர்வினை எழுதியிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் அஞ்சல் வழியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்யலாம். என்.பி.ஆர்.சி.,யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 31

விபரங்களுக்கு: www.nbrc.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us