டிப்ளமா இன் பேக்கேஜிங் | Kalvimalar - News

டிப்ளமா இன் பேக்கேஜிங்

எழுத்தின் அளவு :

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங் (ஐ.ஐ.பி.,) கல்வி நிறுவனத்தில் தொலைநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

மையங்கள்: மும்பையை தலையிடமாகக் கொண்டுள்ள இக்கல்வி நிறுவனம், புதுடில்லி, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் கிளை மையங்களைக் கொண்டுள்ளது.

படிப்பு: டிப்ளமா இன் பேக்கேஜிங் (18 மாதங்கள்)

தகுதிகள்: யூ.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வர்த்தகம், கலை போன்றவற்றில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும், ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்பிற்கான விண்ணப்பத்தைக் கல்வி நிறுவனத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்தோ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வி நிறுவன முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 21

விபரங்களுக்கு: www.iip-in.com

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us