ஐ.ஐ.எம்., அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.ஐ.எம்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்படும் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில், எக்ஸிகியூடிவ் போஸ்ட் கிராட்ஜூவேட் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது.

படிப்புகள்: மார்க்கெடிங் மேனேஜ்மெண்ட், ஸ்ட்ராடெஜிக் மேனேஜ்மெண்ட், ஆப்ரேஷனல் மேனேஜ்மெண்ட், பினான்ஷியல் மேனேஜ்மெண்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மேனேஜ்மெண்ட் அண்ட் அனாலிட்டிக்ஸ் மற்றும் ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட்

தகுதிகள்: துறை சார்ந்த பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேனேஜ்மெண்ட் துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டியது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கையொப்பமிட்டு கல்வி நிறுவனத்தின் நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்ப வேண்டும்.

சேர்க்கை முறை: தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு விடுக்கப்படும். கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் தரும் பதில்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 31

நேர்முகத் தேர்வு நாள்: நவம்பர் 12 முதல் 26 வரை

விபரங்களுக்கு: www.iimk.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us