ஐ.ஐ.ஏ.,வில் அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.ஐ.ஏ.,வில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

பெங்களூருவில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் கல்வி நிறுவனத்தில், பிஎச்.டி., மற்றும் ஒருங்கிணைந்த எம்.டெக்., - பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
புதுச்சேரி பல்கலையுடன் இணைந்து பிஎச்.டி., படிப்பு
கல்கத்தா பல்கலையுடன் இணைந்து ஒருங்கிணைந்த எம்.டெக்., - பிஎச்.டி., படிப்பு

தகுதிகள்: பிஎச்.டி., படிப்பிற்கு, துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைந்த எம்.டெக்., - பிஎச்.டி., படிப்பிற்கு முதுநிலை அல்லது இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் பத்தாம் வகுப்பு முதல் அனைத்து நிலைகளிலும் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ‘கேட்’ /‘ஜெஸ்ட்’ தேர்வு அல்லது யு.ஜி.சி., - சி.எஸ்.ஐ.ஆர்., - நெட் தேர்வு எழுதியிருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் இக்கல்வி நிறுவனம் பிரத்யேகமாக நடத்து, ஐ.ஐ.ஏ.எஸ்.டி., எனும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு செய்த விண்ணப்பதாரர்களுக்கு ஐ.ஐ.ஏ.எஸ்.டி., தகுதி தேர்வில் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கப்படும்.

தேர்வு முறை: சென்னை, பெங்களூரு, புவனேஸ்வர், கொச்சின், டில்லி, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஐ.ஐ.ஏ.எஸ்.டி., நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 21

தேர்வு நாள்: டிசம்பர் 8

விபரங்களுக்கு: www.iiap.res.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us