என்.ஐ.சி.எம்.ஏ.ஆர்., அறிவிப்பு | Kalvimalar - News

என்.ஐ.சி.எம்.ஏ.ஆர்., அறிவிப்பு

எழுத்தின் அளவு :

புனேவில் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கன்ஸ்ட்ரக்‌ஷன் மேனேஜ்மெண்ட் அண்ட் ரிசர்ச் (என்.ஐ.சி.எம்.ஏ.ஆர்.,) கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
அட்வான்ஸ்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் மேனேஜ்மெண்ட் (2 வருடங்கள்)
பிராஜக்ட் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மெண்ட் (2 வருடங்கள்)
ரியல் எஸ்டேட் அண்ட் அர்பன் இன்பிராஸ்ட்ரக்ச்சர் மேனேஜ்மெண்ட் (2 வருடங்கள்)
இன்பிராஸ்ட்ரக்ச்சர் பினான்ஸ், டெவலப்மெண்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் (2 வருடங்கள்)
கன்டம்ப்ரரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் (1 வருடம்)
குவாண்டிட்டி சர்வேயிங் அண்ட் காண்ட்ராக்ட் மேனேஜ்மெண்ட் (1 வருடம்)
ஹெல்த், சேப்டி அண்ட் என்விரான்மெண்ட் மேனேஜ்மெண்ட் (1 வருடம்)

தகுதிகள்:
இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்ச்சர் அல்லது பிளானிங் துறை சார்ந்த இளநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பப் பதிவை மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகக் கல்வி நிறுவனத்தின் நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அனுப்பிப் பதிவு செய்யலாம். என்.ஐ.சி.எம்.ஏ.ஆர்., அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சேர்க்கை முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் என்.சி.ஏ.டி., எனப்படும் பொது நுழைவுத் தேர்விற்கு அழைக்கப்படுவர். மொத்தம் 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் குவாண்டிடேடிவ் அண்ட் அனாலிட்டிக்கல் எபிலிட்டி, டேட்டா இண்டர்ப்ரிடேஷன் மற்றும் வெர்பல் அண்ட் ஜென்ரல் எபிலிட்டி ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை பெறுவர். அல்லது கேட், ஜிமாட், கேட், சிமேட் ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களையும் நுழைவுத் தேர்விற்கு பதிலாக விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 20

விபரங்களுக்கு: www.nicmar.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us