ஜிப்மர் அட்மிஷன் | Kalvimalar - News

ஜிப்மர் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராட்ஜூவேட் மெடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் (ஜிப்மர்) கல்வி நிறுவனத்தில் டி.எம்., மற்றும் எம்.சிஎச்., ஆகிய மூன்று ஆண்டு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
டி.எம்., - நியூரோ அனஸ்தீஷியா, கார்டியாக் அனஸ்தீஷியா, கார்டியாலஜி, கிளினிக்கல் இம்மியூனாலஜி, கிளினிக்கல் பார்மசாலஜி, நியூராலஜி, நெப்ராலஜி, மெடிக்கல் ஆன்காலஜி, எண்டோகிரைனாலஜி, மெடிக்கல் காஸ்ட்ரோஎண்ட்ராலஜி, பீடியாட்ரிக் கிரிட்டிக்கல் கேர் மற்றும் நியூரோஇமேஜிங் அண்ட் இண்டர்வென்ஷன்ஸ்.
எம்.சிஎச்., - சி.டிவி.எஸ்., நியூரோசர்ஜரி, பிளாஸ்டிக் சர்ஜரி, பிடியாட்ரிக் சர்ஜரி, சர்ஜிக்கல் காஸ்ட்ரோஎண்ட்ராலஜி, சர்ஜிக்கல் ஆன்காலஜி மற்றும் யூராலஜி.

தகுதிகள்:
எம்.டி., அல்லது டி.என்.பி., பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். மத்திய அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம்.

மொத்த இடங்கள்:
டி.எம்., - 30
எம்.சிஎச்., - 21

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை ஜிப்மர் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

தேர்வு முறை: கணினி வழி தேர்வாக, மொத்தம் ஒரு மணி முப்பது நிமிடங்களுக்கு நடத்தப்படும். மல்டிபிள் சாய்ஸ் வடிவில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில்களுக்கு தலா 1 மதிப்பெண் குறைக்கப்படும். சென்னை, அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், கொல்கத்தா, மும்பை, புதுடில்லி, புதுச்சேரி, திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைந்துள்ளன.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 26  

தேர்வு நாள்: டிசம்பர் 2 (மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை)

விபரங்களுக்கு: www.jipmer.edu.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us