ஐ.ஐ.டி.,யில் பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.ஐ.டி.,யில் பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ், குஜராத்தில் இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

துறைகள்: பயாலஜிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்பியூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மெட்டிரியல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், வேதியியல், கணிதம், இயற்பியல், எர்த் சயின்சஸ், ஹூமானிட்டீஸ் அண்ட் சோஷியல் சயின்சஸ்.

தகுதிகள்: அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் துறை சார்ந்து எம்.ஏ.,/எம்.எஸ்சி.,/பி.டெக்.,/எம்.டெக்., படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

சேர்க்கை முறை: நுழைவுத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தேர்வான விண்ணப்பதார்களுக்கு மட்டும் இதற்கான அழைப்பு, மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 5

நுழைவுத் தேர்வு / நேர்முகத் தேர்வு: நவம்பர் 2 முதல் 4 வரை

விபரங்களுக்கு: www.iitgn.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us