‘என்மேட்’ தேர்வு | Kalvimalar - News

‘என்மேட்’ தேர்வு

எழுத்தின் அளவு :

தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்காக, ‘கிராஜூவேட் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் கவுன்சில்’ (ஜி.எம்.ஏ.சி.,) நடத்தும் ‘என்மேட்’ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதிகள்
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் மேலாண்மை சார்ந்த இளநிலை படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை
‘என்மேட்’ தேர்விற்காக பிரத்யேகமாக செயல்படும் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறை
மொழி திறன், அளவு திறன், தர்க்க திறன் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு இந்த தேர்வு நடைபெறும். ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். தவறினால், நேரம் முடிந்தவுடன் தானாகவே அடுத்த கேள்விக்கு பக்கம் சென்றுவிடும். ஆகையால் மாணவர்கள் தேர்வு நேரத்தை முறையாகப் பிரித்து கையாளப் பயிற்சி எடுப்பது அவசியம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 3

தேர்வு நாள்: அக்டோபர் 4 முதல் டிசம்பர் 17 வரை

விபரங்களுக்கு: www.nmat.org.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us