ஜாம்-2019 | Kalvimalar - News

ஜாம்-2019

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனங்களில் எம்.எஸ்சி., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான, ஜாயிண்ட் அட்மிஷன் டெஸ்ட் (ஜாம்), நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

படிப்புகள்: ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.,- பிஎச்.டி., டூயல் டிகிரி மற்றும் பிற முதுநிலை பட்டப்படிப்புகள்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: தேர்விற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து இடங்களில் கணினி வழி தேர்வாக நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 10

தேர்வு நாள்: பிப்ரவரி 10

விபரங்களுக்கு: http://jam.iitkgp.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us