எம்.பி.ஏ., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.பி.ஏ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

டில்லி மற்றும் கொல்கத்தாவில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட் (ஐ.ஐ.எப்.டி.,) கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: எம்.பி.ஏ.,-இன்டர்நேஷனல்  பிசினஸ்

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 3 ஆண்டு இளநிலை படிப்பில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம் அல்லது விண்ணப்பத்தை ஐ.ஐ.எப்.டி., வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வி நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

சேர்க்கை முறை: நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 14

தேர்வு நாள்: டிசம்பர் 2

விபரங்களுக்கு: http://tedu.iift.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us