ஏ.சி.இ.டி., தேர்வு | Kalvimalar - News

ஏ.சி.இ.டி., தேர்வு

எழுத்தின் அளவு :

இன்ஸ்டிடியூட் ஆப் ஆக்ட்சுரீஸ் ஆப் இந்தியா (ஐ.ஏ.ஐ.,) நடத்தும் ஆக்ட்சுரீயல் காமன் எண்ட்ரன்ஸ் டெஸ்ட் (ஏ.சி.இ.டி.,) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு எழுதி, முறையாக பயிற்சி பெறுவதன் மூலம் நிதி மற்றும் காப்பீட்டு துறையில் நிபுணர்களாக பரிணமிக்க முடியும்.

தகுதிகள்: 10ம் மற்றும் 12ம் வகுப்புகளில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருப்பது அவசியம். கணிதம் சார்ந்த துறைகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: ஆண்டிற்கு குறைந்தது இரண்டு முறையாவது நடத்தப்படும் இந்த தேர்வு, கணினி வழியாக மட்டுமே நடைபெறும். மல்டிபிள் சாயிஸ் கேள்விகளாக மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் இருக்கும். கணிதம், புள்ளியியல், ஆங்கிலம் மற்றும் லாஜிக்கல் ரீசனிங் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஐ.ஏ.ஐ.,யின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 31

தேர்வு நாள்: டிசம்பர் 15 (காலை 10 மணி முதல் 1 மணி வரை)

தேர்வு முடிவுகள்: ஜனவரி 4

விபரங்களுக்கு: www.actuariesindia.org

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us