வேளாண்மையில் டிப்ளமா படிப்பு | Kalvimalar - News

வேளாண்மையில் டிப்ளமா படிப்பு

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ், செயல்படும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் 2 ஆண்டு பட்டயப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாடப்பிரிவுகள்: வேளாண்மை மற்றும் தோட்டக்கலை

தகுதிகள்: 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் / தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது தொழிற்கல்வி பிரிவில் உயிரியல் மற்றும் வேளாண் செயல்முறை பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதனை, விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி.,யுடன் இணைத்து பல்கலைக்கழக முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 14

விபரங்களுக்கு: www.tnau.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us