கால்நடை மருத்துவப் படிப்பு | Kalvimalar - News

கால்நடை மருத்துவப் படிப்பு

எழுத்தின் அளவு :

தமிழக கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு நிலைகள்: முதுநிலை பட்டம் மற்றும் முதுநிலை டிப்ளமா

தகுதி: 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்து, கால்நடை படிப்பில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
 
விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பல்கலைக்கழக நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்ப வேண்டும்.

சேர்க்கை முறை: பொது நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே அட்மிஷன் நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 7

விபரங்களுக்கு: www.tanuvas.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us