என்.பி.டி.ஐ., அட்மிஷன் | Kalvimalar - News

என்.பி.டி.ஐ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

தேசிய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் பெங்களூருவில் இயங்கி வரும் நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் (என்.பி.டி.ஐ.,) கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா கோர்ஸ் இன் டிரான்ஸ்மிஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் சிஸ்டம் (26 வாரங்கள்)
* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா கோர்ஸ் இன் தெர்மல் பவர் பிளாண்ட் இன்ஜினியரிங் (52 வாரங்கள்)

தகுதிகள்:
டிரான்ஸ்மிஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் படிப்பிற்கு, எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் பிரிவுகளில் டிப்ளமா பெற்றிருக்க வேண்டும். தெர்மல் பவர் பிளாண்ட் இன்ஜினியரிங் படிப்பிற்கு, எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் அல்லது மெக்கானிக்கல் அல்லது சி அண்ட் ஐ பிரிவில் டிப்ளமா பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஏதும் இல்லை.

மொத்த இடங்கள்: 60

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை, நேரடியாகக் கல்வி நிர்வாக அலுவலகத்திலோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ அல்லது என்.பி.டி.ஐ., அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தோ பெற்றுக்கொள்ளலாம். கலந்தாய்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஆகஸ்ட் 21

கலந்தாய்வு மற்றும் சேர்க்கை: ஆகஸ்ட் 30, 31

விபரங்களுக்கு: www.nptibangalore.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us