புதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

புதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

புதுவை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையத்தில், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்:
* எம்.காம்.,
* எம்.ஏ., - இங்கிலிஷ், சோஷியாலஜி, இந்தி
* எம்.பி.ஏ., - ஜெனரல், மார்க்கெட்டிங், பினான்ஸ், இன்டர்நேஷனல் பிசினஸ், எச்.ஆர். மேனேஜ்மெண்ட்)

தகுதிகள்:
பள்ளிப் படிப்பிற்கு பிறகு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் புதுவை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்யலாம் அல்லது இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 31

விபரங்களுக்கு: www.pondiuni.edu.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us