சி.ஐ.டி.டி., அட்மிஷன் | Kalvimalar - News

சி.ஐ.டி.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்பயிற்சி நிறுவனத்தின் கீழ், ஹைதராபாத்தில் இயங்கும் மத்திய கருவி வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் (சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் டூல் டிசைனிங்) முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
* எம்.டெக்., (மெக்கட்ரானிக்ஸ்)
* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் டூல் டிசைன் (பி.ஜி.டி.டி.,)
* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் வி.எல்.எஸ்.ஐ., அண்ட் எம்பெட்டட் சிஸ்டம்ஸ் (பி.ஜி.டி.வி.இ.எஸ்.,)
* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மெக்கட்ரானிக்ஸ் (பி.ஜி.டி.எம்.,)
* போஸ்ட் டிப்ளமா இன் டூல் டிசைன் (பி.டி.டி.டி.,)

தகுதிகள்:
போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா படிப்பிற்கு, துறை சார்ந்த இளநிலை பொறியியல் அல்லது தொழில்நுட்பப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். போஸ்ட் டிப்ளமா படிப்பிற்கு துறை சார்ந்த டிப்ளமா பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.டெக்., -மெக்கட்ரானிக்ஸ் படிப்பிற்கு துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பில், குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை:
விண்ணப்பத்தை சி.ஐ.டி.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வி நிறுவன முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
போஸ்ட் டிப்ளமா மற்றும் போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா - ஜூலை 26
எம்.டெக்., - ஜூலை 21

தேர்வு நாள்: ஆகஸ்டு 5

விபரங்களுக்கு: www.citdindia.org

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us