சென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள் | Kalvimalar - News

சென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்

எழுத்தின் அளவு :

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில், முதுநிலை டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: பி.ஜி., டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பு

துறைகள்: தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், உருது, ஸ்பானிஷ், பிரஞ்ச், ஜெர்மன், அரபிக், கவுன்சிலிங் சைக்காலஜி, யோகா தெரபி, பேங்கிங் அண்ட் பினான்ஸ், டிஜிட்டல் லைப்ரரி மேனேஜ்மெண்ட், டிராவல் அண்ட் டூரிசம் மேனேஜ்மெண்ட், சைபர் கிரைம் அண்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி, டிவி நியூஸ் ரீடிங், வெப்பேஜ் டிசைன், பியூட்டி தெரபி மற்றும் பல.

தகுதிகள்: டிப்ளமா படிப்பிற்கு தேர்வு செய்யும் துறைக்கு ஏற்ப, 10ம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை டிப்ளமா படிப்பிற்கு துறை சார்ந்த இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், சான்றிதழ் படிப்பிற்கு, தேர்வு செய்யும் பாடப்பிரிவிற்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும்.

சேர்க்கை முறை: இணைய வழியாகவோ அல்லது நேரடியாகவோ மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 31

விபரங்களுக்கு: www.unom.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us