எல்லோருமே இன்ஜினியரிங் படிக்க செல்வதால் இதைப் படிக்க வேண்டுமா என்று யோசிக்கிறேன். அடிப்படையில் எனக்கும் இன்ஜினியரிங் ஆர்வம் தான் இருக்கிறது. | Kalvimalar - News

எல்லோருமே இன்ஜினியரிங் படிக்க செல்வதால் இதைப் படிக்க வேண்டுமா என்று யோசிக்கிறேன். அடிப்படையில் எனக்கும் இன்ஜினியரிங் ஆர்வம் தான் இருக்கிறது. பிப்ரவரி 21,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்ஜினியரிங்கைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளில் புதிது புதிதாக பல படிப்புகள் வந்திருப்பதைக் காண்கிறோம். இந்தியாவில் சிறப்பான வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் படிப்பு எது என்றால் பொத்தாம் பொதுவாக இன்ஜினியரிங் படிப்பு எனக் கூறலாம். பிற படிப்புகளைப் படிப்பவரோடு ஒப்பிடுகையில் இன்ஜினியரிங் அடிப்படைகளைப் படித்திருப்பவர் எதையும் எளிதாக புரிந்து கொள்வார் என்பது கல்வியாளர்களின் நம்பிக்கை.

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், நியூக்ளியர் என இன்ஜினியரிங் படிப்புகள் சிறகடித்து விரிந்துள்ளன. இத்துறையில் ஒருவர் மிளிர அடிப்படையில் அவருக்குத் தேவையானது பகுத்தாராயும் மற்றும் தொழில்நுட்பத் திறன். இதில் சிலவற்றை படிப்பும் பிறவற்றை அவரது இயல்பான ஆர்வமும் கற்றுத் தரும். எனவே இன்ஜினியரிங் படிப்பை மற்றுமொரு படிப்பாக மட்டும் படிக்காமல் அதற்குத் தேவையான உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் கடின உழைப்போடும் படித்தால் கட்டாயம் இதில் சிறப்பாக உருவாக முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us