பெட்ரோலியம், கெமிக்கல் படிக்கலாம் | Kalvimalar - News

பெட்ரோலியம், கெமிக்கல் படிக்கலாம்

எழுத்தின் அளவு :

மத்திய அமைச்சகத்தின் கீழ், விசாகப்பட்டினத்தில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி (ஐ.ஐ.பி.இ.,) கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்:
* பி.டெக்.,- பெட்ரோலியம் இன்ஜினியரிங்
* பி.டெக்., - கெமிக்கல் இன்ஜினியரிங்

தகுதிகள்:
12ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். எஸ்.சி., பிரிவினர் / எஸ்.டி., பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. ஜே.இ.இ., தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை:
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஜே.இ.இ., தேர்வில் மாணவர்கள் பெற்றிருக்கும் ரேங்கின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 16

விபரங்களுக்கு: www.iipe.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us