நர்சிங் அட்மிஷன் | Kalvimalar - News

நர்சிங் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சண்டிகரில் செயல்படும் ‘போஸ்ட் கிராட்ஜூவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச்’, கல்வி நிறுவனத்தில் நர்சிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: பி.எஸ்சி.,- நர்சிங் (4 ஆண்டுகள்) மற்றும் பி.எஸ்சி.,-நர்சிங் (போஸ்ட் பேசிக் - 2 ஆண்டுகள்)

தகுதிகள்: 4 ஆண்டு நர்சிங் படிப்பில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன், தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 2 ஆண்டு நர்சிங்(போஸ்ட் பேசிக்) படிப்பிற்கு பள்ளி படிப்புடன், ஜெனரல் நர்சிங் படிப்பில் குறைந்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பி.எஸ்சி.,நர்சிங் - 25 வயதிற்குள் இருத்தல் அவசியம். பி.எஸ்சி.,நர்சிங் (போஸ்ட் பேசிக்) - 45 வயதிற்குள் இருத்தல் அவசியம்.

சேர்க்கை முறை: நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும். ஆங்கில வழியில் 100 மதிப்பெண்களுக்கு ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தகுதி பெற்ற மாணவர்கள் கலந்தாய்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் சேர்க்கை பெறுவர்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 8

தேர்வு நாள்: ஆகஸ்ட் 12

விபரங்களுக்கு: http://pgimeradmissions.net.in/

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us