அக்டோபர் 2, 1869 குஜராத் மாநிலம், போர்பந்தர் எனும் கிராமத்தில், கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி - புத்லிபாய் தம்பதியின் மகனாக, 1869ல், இதே நாளில் பிறந்தவர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அரிச்சந்திரன் கதையை கேட்ட பின், பொய் சொல்லக் கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் வளர்ந்தார்; அதற்காக, பல துன்பங்களை ஏற்றார். பாரிஸ்டர் எனும் வழக்கறிஞர் படிப்பிற்காக, இங்கிலாந்து சென்றார். படிப்பை முடித்து, மும்பையில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின், குஜராத்தின் ராஜ்கோட்டில் பணியாற்றினார்.
அங்கு, பிரிட்டிஷ் அதிகாரியுடன் முரண்பட்டு, தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு சென்றார். அங்குள்ள, டர்பன் நகர நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து சென்றார்; அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அங்கிருந்த பிரிட்டிஷாரின் நிறவெறி பாகுபாட்டுக்கு எதிராக மக்களை திரட்டி, சத்தியாகிரக வழியில் போராடினார்.
தாயகம் திரும்பியதும், சுதந்திர போராட்ட தலைவர் கோபாலகிருஷ்ண கோகலேவின் வழிகாட்டுதலில், காங்கிரசின் தலைவராகி, நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்தார். இவர், 1948, ஜனவரி, 30ல், நாதுராம் கோட்சேவால் சுடப்பட்டு, தன், 78வது வயதில் காலமானார்.
அஹிம்சை நாயகன், தேசத்தந்தை மஹாத்மா காந்தி பிறந்த தினம் இன்று!