பழநி: தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் 115வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழநி ப.சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பகுதி நேர ஓவிய ஆசிரியர் அன்புச்செல்வன் 40, அக்டோபர் 2 வார்த்தையை பயன்படுத்தி அவரது உருவப் படத்தை வரைந்துள்ளார். இவர் ஆண்டுதோறும் அக்.2 ஐ யொட்டி டி.வி.ஆர்., ஓவியம் வரைந்து வருவது குறிப்படத்தக்கது.
தற்போது மூன்று வண்ணங்களில் மூன்று நாட்களில் இந்த படத்தை வரைந்துள்ளார். மேலும் இவர் தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள முக்கிய கட்டுரைகள், படங்களை கொண்டு கண்காட்சியும் அமைத்து உள்ளார்.
அன்புச்செல்வன் கூறியதாவது:
2021ல் தினமலர் நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது பெற்றுள்ளேன். இதற்கு நன்றி கடனாக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு முறையில் டி.வி.ஆர்., ஓவியங்களை படைக்க முயற்சி செய்து வருகிறேன்.
முதலில் தினமலர் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரது உருவப்படத்தை வரைந்தேன். அதன் பின் தினமலர் நாளிதழில் வெளிவந்த குழந்தைகளின் புகைப்படங்கள், செய்திகளின் தலைப்புகள், டி.வி.ஆர்.,வாழ்க்கை வரலாறு புத்தகமான கடல் தாமரை என்ற வார்த்தையை பயன்படுத்தி உருவப்படத்தை வரைந்தேன்.
தற்போது டி.வி.ஆர்., பிறந்த நாளான அக்டோபர் 2 வார்த்தையை பயன்படுத்தி அவரது உருவப்படத்தையும், காந்தி படத்தையும் வரைந்து உள்ளேன். ஆசிரியர்களுக்கு உறுதுணையாக உள்ள தினமலர் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.