ஆர்.பி.ஐ.,-ன் இலவச பயிற்சி | Kalvimalar - News

ஆர்.பி.ஐ.,-ன் இலவச பயிற்சி

எழுத்தின் அளவு :

நிதித் துறை பேராசிரியர்களுக்கான பிரத்யேக உதவித் தொகை திட்டத்தை, ‘ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா’ அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி.,) அல்லது அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) அங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முழுநேரப் பொருளாதாரம் அல்லது நிதித் துறையில் பேராசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு குறுகிய கால ஆராய்ச்சி படிப்பு ஒன்றை வழங்கவுள்ளது.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் ஆராய்ச்சி திட்டம் மற்றும் அவர்களது கல்வி தகுதி, வேலை அனுபவங்களின்  அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் இந்த இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எண்ணிக்கை: ஐந்து பேருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

கால அளவு: மூன்று மாதங்கள், ஆகஸ்ட் 1 தொடங்கி அக்டோபர் 31 வரை

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 31

விபரங்களுக்கு: https://opportunities.rbi.org.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us