மொழிபெயர்ப்பாளர்கள் அதிகம் பணியாற்றும் இடமாக ஐ.நா., சபை உள்ளது. உலகை ஒருங்கிணைத்தல், பேச்சுவார்த்தைக்கு உதவுதல், உலக அமைதி, பாதுகாப்புக்கு பங்களித்தல் போன்றவற்றுக்கு உறுதுணையாக விளங்கும் மொழிபெயர்ப்பு வல்லுனர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக செப். 30ல் ஐ.நா., சார்பில் உலக மொழிபெயர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளது. இவற்றை ஒருங்கிணைப்பதில் மொழிபெயர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.