டி.என்.பி., நுழைவுத் தேர்வு | Kalvimalar - News

டி.என்.பி., நுழைவுத் தேர்வு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் ‘நேஷனல் போர்ட் ஆப் எக்சாமிநேஷன்’ வழங்கும் ‘டிப்ளொமேட் ஆப் நேஷனல் போர்ட்’ (டி.என்.பி.,) படிப்பிற்கான நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டி.என்.பி., படிப்பு: சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி டி.என்.பி., பட்டமானது எம்.டி., எம்.எஸ்., டி.எம்., எம்.சிஎச்., தகுதிகளுக்கு இணையான ஒன்று. இந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற இயலும்.

தகுதிகள்: எம்.பி.பி.எஸ்., படித்திருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடம் இன்டர்ன்ஷிப் பயிற்சியை நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது ஆகஸ்ட் 31, 2018ம் தேதிக்குள் நிறைவு செய்பவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை: இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். கணினி வழி தேர்வாக மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:  மே 31

தேர்வு நாள்: ஜூன் 29

தேர்வு முடிவுகள்: ஜூலை 31

விபரங்களுக்கு: www.nbe.edu.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us