சென்னை: உயர் கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில், சென்னை அண்ணா பல்கலை முன்னிலை பெற்றுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த, டைம்ஸ் இதழ், உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த தரவரிசை பட்டியலை, நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அதில், இந்திய பல்கலைகளில், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., சென்னை அண்ணா பல்கலை, ஜாமியா மிலியா பல்கலை ஆகியவை, முன்னிலை இடங்களை பிடித்துள்ளன. இதையடுத்து, அழகப்பா பல்கலை, அலிகார் முஸ்லிம் பல்கலை, பனாரஸ் ஹிந்து பல்கலை, பாரதியார் பல்கலை, கவுஹாத்தி, தன்பாத், பாட்னா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.டி.,க்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில், சர்வதேச அளவில், 108 நாடுகளை சேர்ந்த, 1,904 உயர் கல்வி நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. அதில், 91 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. சர்வதேச அளவிலான முதல், 10 இடங்களில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நிறுவனங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன. பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலை, முதலிடம் பெற்றுள்ளது. அதற்கடுத்த இடங்களை, அமெரிக்காவின் ஸ்டான்போர்ட், எம்.ஐ.டி., ஹார்வர்டு ஆகியவை பெற்றுள்ளன.