பேக்கேஜிங் படிப்பு | Kalvimalar - News

பேக்கேஜிங் படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின்கீழ் இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங் (ஐ.ஐ.பி.,) கல்வி நிறுவனத்தில் இரண்டு வருட போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் பேக்கேஜிங்

தகுதிகள்: 12ம் வகுப்புடன் ஏ.ஐ.சி.டி.இ., அங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் மூன்று வருட இளநிலை பட்டப்படிப்பை அறிவியல் துறையில் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல்/வேதியியல்/கணிதம், மைக்ரோ பையாலஜி அல்லது பையோ கெமிஸ்ட்ரி ஆகியவற்றில் ஒன்றையாவது முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்து, குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும் விலக்கு உண்டு.

சேர்க்கை முறை: ஐ.ஐ.பி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக மையங்களில் விண்ணப்பப் படிவத்தை பெற்றோ விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களில் இருந்து ‘மல்டிபில் சாயிஸ்’ கேள்விகள் முறையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு நேர்காணலின் மூலம் சேர்க்கை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 8

தேர்வு நாள்: ஜூன் 14

விபரங்களுக்கு: www.iip-in.com

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us