சிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

சிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

சென்னை உட்பட நாடு முழுவதிலும் 27 நகரங்களில் செயல்படும் மத்திய அரசின் ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில், டிப்ளமா படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் சி.ஐ.பி.இ.டி.,-ஜே.இ.இ., தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்பு நிலைகள்: டிப்ளமா, போஸ்ட் டிப்ளமா மற்றும் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா

தகுதிகள்: டிப்ளமா படிப்பிற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி; போஸ்ட் டிப்ளமா படிப்பிற்கு டிப்ளமாவில் தேர்ச்சி; போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா படிப்பிற்கு அறிவியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: சி.ஐ.பி.இ.டி.,-ஜே.இ.இ.,  பிரிலிமினரி மற்றும் மெயின் என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 27

தேர்வு நாள்: ஜூலை 1

விபரங்களுக்கு: https://eadmission.cipet.gov.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us