திருமழிசை: திருமழிசை அடுத்துள்ள பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட குத்தம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் போதிய வகுப்பறை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, தமிழக அரசு 3.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிப்பறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டது. இந்த பள்ளி கட்டடங்களை நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி தி.மு.க., எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி, கைத்தறி மற்றும் துணி நுால் அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்றனர். பின், அமைச்சர் காந்தி, பள்ளி மாணவியர் வாயிலாக கட்டடங்களை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தொடர்ந்து, பள்ளி வகுப்பறைகளை ஆய்வு செய்தார். இதில், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் மு.முஹமது அப்துல்லா, பூந்தமல்லி ஒன்றிய குழு தலைவர் எம்.ஜெயகுமார், தலைமையாசிரியர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.