பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் செயல்படும் அகாடமி ஆப் சயின்டிபிக் அண்ட் இன்னோவேடிவ் ரிசர்ச் எனும் @தசிய முக்கியத்துவம் வா#ந்த கல்வி நிறுவனத்தில், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளில் பிஎச்.டி., படிப்பிற்கான அட்மிஷன் நடைபெற உள்ளது.

தகுதி: துறை சார்ந்த முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் கேட் / ஜே.ஆர்.எப்., / எஸ்.ஆர்.எப்., /நெட்/ டி.பி.டி., / டி.எஸ்.டி., போன்ற தகுதி தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இயலும். தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இது குறித்த அறிவிப்புகள் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 24

ஆப்டிடியூட் தேர்வு/நேர்காணல்: மே 25 முதல் ஜூன் 13 வரை

விபரங்களுக்கு: http://acsir.res.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us