சிறப்பு படிப்புகள் | Kalvimalar - News

சிறப்பு படிப்புகள்

எழுத்தின் அளவு :

மாற்றுத்திறனாளிகளுக்கு உடற்பயிற்சி மற்றும் சிகிச்øŒ அளிக்கும் வகையில் சிறப்பு படிப்புகளுக்கான அறிவிப்பை, என்.ஐ.எல்.டி., வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் நடத்தும், சி.இ.டி., எனும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
பி.பி.ஒ.,
பி.பி.டி.,
பி.ஒ.டி.,

தகுதிகள்: பள்ளிப் படிப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்பைக் கைவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலானவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.

வயது வரம்பு: ஜனவரி 1, 1998 முதல் டிசம்பர் 31, 2001ம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத் திறனாளிகள் ஜனவரி 1, 1993 முதல் டிசம்பர் 31, 2001ம் தேதிக்குள் பிறந்தவராக இருந்தால் @பாதுமானது.

தேர்வு முறை: பொது அறிவு, இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். அனைத்துக் கேள்விகளும் மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகளாகவே இருக்கும். தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படாது.

சேர்க்கை முறை: நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கல்வி நிறுவனங்கள்:
திவ்யாங்ஜென் கல்வி நிறுவனம், கொல்கத்தா
சுவாமி விவேகானந்த் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரீஹபிலேஷன் ட்ரெய்னிங் அண்ட் ரிசர்ச், ஒடிசா
நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் எம்பவர்மெண்ட் ஆப் பர்ஷன்ஸ் வித் மல்டிப்பில் டிஸெபிலிட்டி, சென்னை

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 25

தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 17

விபரங்களுக்கு: www.niohkol.nic.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us